• about us

Traveller Guide

For South Indian travelers, especially those from Tamil Nadu, the Nattukottai Chettiar Chatram in Varanasi (Kasi) is a cherished and highly recommended destination. This 200-year-old building, beautifully maintained by the Chettinad trust, offers a divine atmosphere and a taste of home. If you’re planning a visit, here’s what you need to know.

Authentic Chettinad Cuisine

One of the main highlights is the delicious and unlimited South Indian food, prepared in an authentic Chettinad style.

The food is known for being excellent and is prepared to be suitable even for older visitors.

Following tradition, visitors are expected to wash their own plates after their meal.

If you are not staying at the math, you can still enjoy the food by paying an entry fee of ₹50, which excludes the cost of the meal.

The chatram is more than just a place to eat and stay; it’s a spiritual hub.

The building itself is over two centuries old and remains in remarkable condition.

The temples located inside the premises are described as awesome, filling the space with a palpable divine energy.

You can witness a unique and sacred tradition here: the grinding of sandalwood paste that is sent daily to the main Kasi Viswanath Temple for the deities.

Holy water from the Ganges (Kasi Theertham) is available for purchase in traditional copper pots.

Finding the Location: To get the correct address from locals, it’s best to ask for the “Naat Koot Chatram

It is considered a must-visit place for anyone traveling to Varanasi, offering a unique blend of cultural heritage, spiritual solace, and authentic hospitality.

நகரத்தார்களுக்குக் காசி நகரச்சத்திரம் செய்துவரும் சேவைகள் 

  1. மானேஜருக்கு முன்பணம் அனுப்புகிறவர்கள் பெயருக்கு அவர்கள் பிறந்த நட்சத்திரங்களில் விசுவேசர் கோவிலில் அபிசேகம் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்புகின்றனர்.
  2. கங்கைத் தீர்த்தம் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அவரவர் விருப்பம் போல டிரம் அல்லது குடத்தில் கங்கைத் தீர்த்தம் அனுப்பி வைக்கின்றனர். டிரம், குடம் விலைகள் அடிக்கடி மாறிக் கொண்டிருப்பதால், தேவைக்காரர்கள் முன்கூட்டி எழுதி மானேஜர் குறிப்பிடும் தொகையை அனுப்பினால் அவரவர் விருப்பப்படி பாசஞ்சர் மியில் பிரயாகையிலிருந்தாவது காசிலிருந்தாவது பிரயாகைக் கங்கை அனுப்பி வைக்கப்பெறும்.
  3. மோட்ச தீபம் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பெறும். அவ்வாறு போடவேண்டும் என்று விரும்புகிறவர்கள் நகரச்சத்திரம், வாரணாசி என்ற விலாசத்துக்குத் தந்தியடித்து இறந்தவர் பெயரையும் தந்தியில் சொல்லி, பணத்தையும் தந்தி மணியார்டரில் அனுப்ப வேண்டும். ஐந்து ரூபாய் அனுப்பினால் நகரேசுவார் கோவிலிலும் 50 ரூபாய் அனுப்பினால் விசுவேசர் கோவில், விசாலாட்சி கோவில், நகரேசுவரர் கோவில் மூன்றிலும் மோட்ச தீபம் போட்டு, விபூதி பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். பிரசாதம் அனுப்பி வைப்பதற்குரிய விலாசத்தைத் தந்தியில் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
  4. அஸ்தி போடுதல், அஸ்தியை அனுப்பி 50 ரூபாய் செலுத்துபவர்களுக்குப் புண்ணியவாசம் செய்து பிண்டம் போட்டு அஸ்தியையும் பிண்டத்தையும் சேர்த்துக் கங்கையில் கரைத்துக் சுங்காபுத்திரர் மேற்படி காரியங்களைச் செய்துவைக்க ஏற்பாடு செய்து, அஸ்தி அனுப்பியவர்களுக்கு விபூதி, குங்குமம், வயிரவர்
  5. கயிறு, தீர்த்தச் செம்பு ஆகியவை அனுப்பி வைக்கப்படும். ரூபாய் 50க்கும் குறைந்த தொகை மட்டும் அனுப்பினால், எஞ்சிய தொகையும் வரும்வரை அஸ்திபோட ஏற்பாடு செய்ய இயலாது.
  6. காசிக்கு வருபவர்கள் தங்குவதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது. யாத்ரீகர்கள், சாந்தி சதாபிஷேகம் முதலிய வைதீக நிகழ்ச்சிகளுக்காகவும் சவண்டி சிரார்த்தம் ஹோமம் யக்கும் முதலிய சடங்குகள் செய்வதற்காகவும் வருபவர்கள், அந்திம காலத்தைக் காசியில் கழிக்க வரும் காசிவாசிகள், காசி இந்துப் பல்கலைக் கழகத் தேர்வுகள் எழுத வரும் ஆடவர், பெண்டிர் ஆகியோர் வாதியாகத் தங்குவதற்கு நமது சத்திரம் பயன்பட்டு வருகிறது.

மேலே கண்ட வசதிகள் யாவும் நகரத்தார்களுக்குச் செய்து கொடுக்கப்படுகின்றன. காசிச் சத்திரமும் இதைச் சேர்ந்த கிளைச் சத்திரங்களும் தனிப்பட்டவர்களுடைய சொத்து, நகரத்தார்களுடைய வசதிக்காக நகரத்தார்கள் பணத்தில் ஏற்பட்டவை; ஒரு மானேஜிங் சொசைட்டியின் நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டை இந்தச் சத்திரங்களில் தங்கும் உரிமை, மானேஜிங் சொசைட்டியார் அவ்வப்போது வகுக்கும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, நகரத்தார்களுக்கு உண்டு. நகரத்தார்கள் மிகப் பொறுப்புடன் சிபார்சு செய்யும் பிற சமூகத்தினரும் சத்திரங்களில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு சிபார்சு செய்யப்படுபவர்கள் இந்துக்களாகவும் கூடுமானவரை சைவ சமயத்தில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். சத்திரத்தில் இறைச்சி சமைக்கவோ உண்ணவோ கூடாது என்பதையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.