- about us
Sambo சம்போ
சம்போ என்பது சமஸ்கிருதச் சொல், இச்சொல் சிவபெருமானைக் குறிக்கும்.
சம்போ
காசிவிசுவநாதர் கோயிலுக்கு நாள்தோறும் 2 முறை பூசை, அபிஷேக, அலங்காரப் பொருள்கள் நகரச் சத்திரத்திலிருந்து அனுப்பப்படுகின்றன.
காலை 10-40க்கும் இரவு 9.30க்கும் இப்பொருள்கள் சத்திரத்திலிருந்து முறைப்படி எடுத்துச் செல்லப்படுகின்றன. “சம்போ சம்போ சங்கர மகாதேவா” என்று சொல்லிக் கொண்டு, நகரச்சத்திரத்து வேலையாட்கள் அவற்றைக் கோவிலுக்குக் கொண்டுபோகின்றனர். அப்போது வழியிலுள்ள மக்கள், கடைக்காரர்கள் ஆகியோர் சம்போவைப் பார்த்துத் தலைவணங்குகின்றனர்.
நகரச் சத்திரத்தின் மாடியிலுள்ள சுப்பிரமணியர் படத்தின் முன்பாகச் சாம்பிராணிக் கலசத்தை வைத்துப் பிறகு கீழே பாதாள ஈசுவார் கோவிலில் இருந்து தசாங்கம் போட்டு நகரேசுவரர் கோவிலை வலம் வந்து, சம்போ புறப்படும். இக்கோலம் கண்டார் அனைவரும் பக்தியுடன் வழிபடக்கூடிய காட்சியாகும்.
உச்சிக்கால பூசைக்குக் கொண்டுபோகப் பெறும் பொருள்களாவன:
வாசனைத் தைலம், தேன், பன்னீர், ஊதுபத்தி, சூடம், அத்தர், தேசிச்சீனி (பழுப்புச் சர்க்கரை) திருநீறு, சந்தனம், முக்களை வில்வம் 16, அறுகம்புல், பூ மாலை-3, பால் (ஆறேகால் படி) தயிர், பஞ்சாமிர்தம் பிரயாகைக் கங்கை, பூணுல் (யக்ஞோபீதம்), அரிசி (மங்கள அட்சதை).
அர்த்தசாமப் பூசைக்கு மேற்கண்ட பொருள்களுடன் முக்களை வில்வம் 108-ம் சவ்வாது, பட்டு, நாகஆபரணம், பால் அண்டா, பூக்கூடை, வெண்சாமரை, கோடச உபசார ஆரத்திப் பொருள்கள் ஆகியவை வெள்ளிப் பாத்திரங்களில் கொண்டுபோகப்படுகின்றன. அபிஷேகமான அவ்வமயம், இரவு 3 மணிக்கு நிகழும் உஷத் காலம் என்னும்
திருவனந்தலுக்கு வேண்டிய பொருள்களும் கொண்டுபோய்க் கொடுக்கப்படுகின்றன.
அன்னபூரணி கோயிலுக்கு அபிஷேகப் பொருள்களும் குங்குமமும் ஒரு டலியாளில் வைத்துக் கொண்டுபோய்க் கொடுக்கப்படுகின்றன. (டலியா – வட்டமான தூக்குச்சட்டி).
அபிடேக, பூசைப் பொருள்களை இந்துஸ்தானி பிரரமணர்கள்தான் தூக்கிக் கொண்டுபோது வழக்கம். அதற்காக, அவர்கள் நால்வரன நகரச் சத்திரத்தில் சம்பளச் சிப்பந்திகளாக நியமித்திருக்கிறார்கள்.
இவர்கள் தவிர, உச்சிக்காலத்தில் ஓர் ஆளும், அர்த்தசாமத்தில் ஆறுபேரும் உடன்போய் உபரிப் பொருள்களை எடுத்துச் செல்லுகின்றனர்.
யாழின் இனிமையில் தானே மயங்கிக் கிடந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர்; அச்சீரிய இசைக் கருவியைப்பற்றி ஆராய விபுலானந்த அடிகளுக்கு உறுதுணையாய் இருந்தவர்கள் நகரத்தார்கள். தமிழருக்குச் சிறப்பாக உள்ள பிறிதோர் இசைக் கருவி நாதசுரம், ஷனாய் வாத்தியமே மங்கல வாத்தியமாகத் திகழும் வட இந்தியாவில் நாதகாத்தின் புகழை நிலைநாட்டியிருப்பவர்கள் நகரத்தார்கள் ஆவர். உச்சிக்காலம், அர்த்தசாமம் ஆகிய நகரத்தார்கள் அபிடேகம் செய்யும் இந்த இரண்டு வேளைகளில் பட்டும் நகரச்சத்திரத்து மேளகாரர்கள் மேளம் வாசித்து வருகிறார்கள்.
அன்னபூரணி
அபிடேகக் காலங்களில் நகரத்தார்களுக்கு அர்ச்சனை செய்வதற்கு ஒரு அத்தியான பட்டரை நகரச்சத்திர அலுவலர் நியமித்திருக்கிறார்கள். அவர், பூசை வேளைகளில் காசி விசுவநாதர் கோவிலுக்கு வந்து தயாராக இருப்பது வழக்கம். எவ்வளவு பேர் வழிபட வந்திருந்தாலும், நகரத்தார்களுக்குச் சிறப்பான முறையில் மரியாதை செய்வது கோவில் பண்டாக்களின் பழக்கம் ஆகும். அர்த்தசாமப் பூசைக்குச் சிங்கார பூசை என்று பெயர். காசிவிசுவநாதரை வழிபடும் மக்கள் எல்லோரும் இந்தப் பூசையைக் காண்பதையே முக்கியமான கடமையாகவும் பெறற்கரிய பேறாகவும் கொண்டிருக்கின்றனர்.
Yகடைகள் வழியாகச் சம்போ அர்த்தசாமத்திற்குச் சென்று திரும்பியதும் வேனிற் காலத்தில் கடைகளை அடைப்பதும், குளிர்காலம் பனிக்காலங்களில் சம்போ கோவிலுக்குச் செல்லும்போது கடைகளை அடைப்பதும் நடைமுறையாக இருந்து வருகிறது. இவ்வகையில் பார்க்கும்போது, காசிநகர் வணிகர் தம் வாழ்வை வகைப்படுத்துவது நகரத்தார்களின் சம்போவேயாகும்.
இதிலிருந்து குறித்த நேரத்தில் சம்போ அனுப்பப்படுவதும் தெரியவரும், பஞ்சாப் மெயில் தவறினாலும்கூட, நகரத்தார் சம்போ நேரப்படி வரத்தவறுவதில்லை என்பது பழமொழி, 1942-ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கம் நடைபெற்று, காசிமாநகரில் கலகங்கள் நிகழ்ந்தன. ஊரடங்குச் சட்டம் போடப்பெற்றது. அப்போதும்கூட, விதிவிலக்குப்பெற்று, சம்போ உரிய நேரத்தில் சென்றுவந்தது; இது வாலாற்றில் குறிப்பிடத்தக்கது.
குளிர்காலச் சட்டை
ஐப்பசி மாதம் வசந்த பஞ்சமியிலிருந்து மாசி மாதம் சிவன் இராத்திரி வரை, குளிர்காலமாக இருப்பதால் விசுவேசருக்குக் குளிர்காலச் சட்டை (மக்மல் பட்டு) அணிவிக்க நகரத்தார்கள் கட்டளை ஏற்படுத்தி அவ்வாறு நடைபெற்று வருகிறது.
மடைப்பள்ளி
விசுவேசர்க்கு நாக ஆபரணம், மேற்படி சொக்கிரீடம் பள்ளியறைக்கு வெள்ளிக்கட்டில் ஆகியவை நகரத்தார்களால் செய்யப் பெற்றிருக்கின்றன.) விசுவேசர் கோலில் மடைப்பள்ளியும் நகர்த்தார்களால் கட்டில் கொடுக்கப் பெற்றதே ஆகும். நைவேத்தியம் வைப்படிற்கு உள்ள நாற்காலிகள், கருவறையைச் சுற்றி நான்கு திக்குகளிலும் போடப்படும் திரைகள் ஆகியவையும் நகரத்தார்களின் உபயமே, நைவேத்தியத்துக்கும் தீபத்துக்கும் வேண்டும் பொருள்கள் யாவும் ஒவ்வொரு நாளும் நகரச்சத்திரத்திலிருந்து விகவேசர் கோவிலுக்கு அனுப்பப்பெறுகின்றன, அபிடேகத்திற்குரிய கங்கை நீர் வைப்பதற்குத் தாமிர அண்டா கோபுரத்தின்மீது மெர்க்குரி விளக்கு ஆகியவையும் நகரத்தார்கள் திருப்பணிகளே
பிரதோஷ நாட்களில் விசுவேசர் கோயிலின் மாலை 5 மணிக்குப் பிரதோஷ பூசை நடைபெறும். அந்தப்பூசைக்காக, பூபால் நீங்கலாக ஏனைய பூசைப் பொருள்கள் யாவும் கொண்டு போகப்படுகின்றன. இவை தவிர காப்பரிசி செய்தவற்காக அரிசியும் வெல்லமும் நகரச் சத்திரத்திலிருந்து அனுப்பப் பெறுகின்றன.
பள்ளியறைக் கட்டில் அங்குள்ள வெள்ளிச் சாமான்கள் யாவும் நகரத்தார்களால் மகாவீர் பிரசாத் பண்டாளிடம் ஒப்புவிக்கப் விசுவேசர் பெற்று கோயிலில் இருந்து வருகின்றன.
காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி (Varanasi) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.
நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் ஒரு மடம் போன்ற அமைப்பாகும். இங்கு ஒரு சிவலிங்கம் கோயில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து காசிக்குச் செல்பவர்களுக்கு மட்டும் பண்டைய சத்திரத்தில் தங்குமிடம், மூன்றுவேளை உணவு வசதிகளுக்கு சிறு அளவில் கட்டணம் பெறப்படுகிறது. மேலும் கட்டணம் இன்றி தங்கும் பெரிய அறைகளும் உள்ளது. இச்சத்திரம் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூக அமைப்பினரால் பராமரிக்கப்படுகிறது.
காசி விஸ்வநாதர் கோயிலை பூட்டுவதற்கு முன்னர் நடைபெறும் இராக்கால பூஜையின் போது, அன்றாடம் இந்த சத்திரத்திலிருந்து பூஜைக்கான பால், பழம், பூக்களுடன், மேள தாளத்துடன் சென்றுடன் காசி விஸ்வநாதர் வழிபாடு நடைபெறும்.
இச்சத்திரத்திற்கு சொந்தமாக, காசி நகரத்தில் பாயும் கங்கை ஆற்றின் கரையில் சிக்புரா பகுதியில் 62,000 சதுர அடி பரப்பில் நந்தவனம் உள்ளது. தற்சமயம் 2025 ல் இங்கு புதிய சத்திரம் 130 அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது
- இச்சத்திரத்திற்கு சொந்தமான காசி விசாலாட்சி கோயிலை நாட்டுக்கோட்டை நகரத்தார்களே நிர்வகிக்கின்றனர்.
- வட இந்தியாவில் முக்கிய நகரங்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் விடுதிகள் உள்ளது.
- அலகாபாத்தில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் (தொலைபேசி எண் 0532-2501275) குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது.
- அயோத்தி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்
- கயா நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்
- தில்லி
- கொல்கத்தா
- நாசிக்
- AREAS OF SPECIALTY
Holistic Programs for Body & Soul
Real People. Real Results
"I came here feeling overwhelmed and exhausted. The care I received not only helped me heal physically but also gave me a renewed sense of peace. The team truly listens and makes you feel valued every step of the way."

"I struggled with stress and chronic pain for years. After working with the team, I finally found relief and a plan that works for my lifestyle. They focus on the whole person, not just the symptoms."

"What I love most is how personalized the care is. I never feel rushed, and every visit leaves me feeling stronger and more balanced. This clinic has truly changed my outlook on health and wellness."

"The professionalism and genuine care here are unmatched. Every session helps me feel more energized and motivated to take care of myself. I can honestly say this experience has been life-changing."

"From the moment I walked in, I felt at home. The staff’s compassion and dedication make all the difference. I’ve gained not just better health, but also confidence and hope for the future."

- Schedule your visit online